www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

சோனாகச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனாகச்சி பகுதியில் எடுக்கப்பட்ட ஓர் காட்சி, 2005

சோனாகச்சி, தங்க மரம் எனப் பரவலாக அழைக்கப்படும் இடம் இந்தியாவில் அமையப்பெற்றிருக்கும் மிகப்பெரிய விலைமாதுக்கள் விற்பனையாகும் இடமாகும். கொல்கத்தாவில் அமையப்பெற்றிருக்கும் இப்பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விலை மாதுக்கள் பாலியல் தொழில் நடத்துகின்றனர்.

பெண்கள் கடத்தப்படுதல்[தொகு]

சோனாகச்சிப் பகுதிக்கு விலைமாதுக்களாக வேலை செய்ய முன்வருபவர்களில் பலர் கடத்தப்பட்டும், குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்சனைகளினாலும் இங்கு வருகின்றனர். சிறுவயதிலேயே உள்ள மாணவிகள், ஏழ்மைநிலையிலுள்ள பெண்கள் என பல மாநிலங்களிலிருந்தும் கடத்திவரப்பட்ட பெண்களே இத்தகைய விபச்சார நிலையில் தள்ளப்படுகின்றனர். பதினெட்டு வயதிற்கு உட்பட்டவர்கள் பாலியற் தொழிலில் ஈடுபட இந்திய அரசின் சட்டம் அனுமதிப்பதில்லை. அதே வேளை, அண்டை நாடுகளிலிருந்தும் இந்தியாவிற்குள்ளேயிருந்தும் கடத்திவரப்படும் பெண்களில் பெரும்பாலானோர் பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.

பாலியல் தொழில் பகுதியான வரலாறு[தொகு]

சோனாக்கச்சி ,2005

1700 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய ராஜாக்களின் காலத்திலேயே இப்பகுதி விலை மாதுக்கள் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தனர். வெளிநாடுகளிலிருந்து படையெடுப்பவர்களாலும், மேலும் உள்நாட்டில் உயர்ந்த சாதியினர் எனக் கருதப்படுபவர்களாலும் பெரிதும் வரவேற்பைப் பெற்ற இப்பகுதி, இன்றளவும் இயங்கி வருகின்றது.

இன்றைய நிலை[தொகு]

இன்று சோனாகச்சியில் வாழும் விலை மாதுக்களும் அவர்கள் குழந்தைகளின் நலன்கருதியும் பல சமூக சேவை அமைப்புகள் எயிட்ஸ் நோயைப் பற்றிய தெளிவான கருத்துக்களினையும் மேலும் பல சுகாதார ஒழுங்குநெறிகளினையும் கற்றுக்கொடுத்து வருகின்றன. தாங்கள் செய்யும் இப்பாலியல் தொழிலை சட்டரீதியாக அரசு அங்கீகாரம் வழங்க போராடி வருகின்றனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. பாலியல் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்கக் கோரிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோனாகச்சி&oldid=2013538" இலிருந்து மீள்விக்கப்பட்டது