www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

பழுப்பு நாய் விவகாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:40, 28 ஆகத்து 2022 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''பழுப்பு நாய் விவகாரம்''' (ஆங்கிலம்: The Brown Dog affair) என்பது 1903 முதல் 1910 வரை பிரிட்டனில் பரபரப்பாகப் பேசப்பட்ட உடற்கூறாய்வு பற்றி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

பழுப்பு நாய் விவகாரம் (ஆங்கிலம்: The Brown Dog affair) என்பது 1903 முதல் 1910 வரை பிரிட்டனில் பரபரப்பாகப் பேசப்பட்ட உடற்கூறாய்வு பற்றிய அரசியல் சர்ச்சையாகும். இலண்டன் பல்கலைக்கழக மருத்துவ விரிவுரைகளில் ஸ்வீடன் நாட்டுப் பெண்ணியவாதிகளின் இரகசியமாக ஊடுருவிய செயல், மருத்துவ மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சண்டை மூண்ட நிகழ்வுகள், நாய் சிலைக்கு ஒன்றுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்ட நிகழ்வு, பிரிட்டனின் அரச நீதிமன்றங்களில் அவதூறு வழக்கு போடப்பட்ட நிகழ்வு, அறிவியல் பரிசோதனைகளில் விலங்குகளைப் பயன்படுத்துவதைக் குறித்து விசாரிக்க இராயல் ஆணையம் ஒன்று நிறுவப்பட்ட நிகழ்வு என பலதரப்பட்ட நிகழ்வுகளை உள்ளடக்கியது இந்த விவகாரம். நாட்டையே பிளவுபடுத்திய இந்த விவகாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வழக்காக மாறியது.

பிப்ரவரி 1903-ல் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் உடலியங்குவியல் துறையைச் சேர்ந்த வில்லியம் பேலிஸ் 60 மருத்துவ மாணவர்களைப் பார்வையாளர்களாகக் கொண்ட ஒரு வகுப்பில் ஒரு பழுப்பு நிற டெரியர் நாயை சட்டவிரோதமான முறையில் உடற்கூறாய்வு செய்ததே இந்த சர்ச்சைக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தது. சம்பவத்தன்று அந்த நாய்க்குப் போதுமான அளவு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்தது என்று பேலிஸ்ஸூம் அவரது சகாக்களும் கூறினாலும் மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை என்றும் உடலை அறுக்கும் போது அந்த நாய் நனவுடனும் வலியால் துடித்துக் கொண்டும் இருந்தது என்றும் அதை மாறுவேடத்தில் கண்காணித்த ஸ்வீடன் நாட்டு ஆர்வலர்கள் கூறினர். இந்த நிகழ்வு கொடூரமானதும் சட்டவிரோதமானதும் ஆகும் என்று கூறிய தேசிய உடற்கூறாய்வு எதிர்ப்பு சங்கம் இந்தச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது. ஹார்மோன்களைக் கண்டறிவதற்கு வழிவகுத்த அறிவியல் ஆராய்ச்சிகளை நாய்கள் மீது செய்த பேலிஸ், இவற்றைத் தனது நற்பெயருக்கு உண்டான களங்கமாகக் கருதி வெகுண்டு அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்து அவ்வழக்கில் வெற்றி பெறவும் செய்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழுப்பு_நாய்_விவகாரம்&oldid=3503373" இலிருந்து மீள்விக்கப்பட்டது