www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

நீர்நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்நாய்
Eurasian otter (Lutra lutra)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Lutrinae

Bonaparte, 1838
Genera

Enhydra
Lontra
Lutra
Lutrogale
Pteronura
Megalenhydris
Sardolutra

படிமம்:Otter ranges.png
நீர்நாய்களின் பரவல்

நீர்நாய்(Otter)என்பது நீரில் வாழ தன்னை ஓரளவு தகவமைத்துக்கொண்ட ஒருவகைப் பாலூட்டி விலங்கு. நீர்நாய்கள் பொதுவாக மீன்கள், சிறிய நிலநீர்வாழிகள், பறவைகள் முதலியவற்றை இரையாகக் கொள்கின்றன. நீர்நாய்களில் மொத்தம் 13 சிற்றினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

பண்புகள்

நீர்நாய்கள் மெலிந்த நீண்ட உடல்வாகினைப் பெற்றுள்ளன. நீரில் செல்ல ஏதுவாக பாதங்களில் சவ்வுகளும், வேட்டையாட உதவியாக கூர்மையாக உகிர்களும் உண்டு. கடல் நீர்நாயைத் தவிர மற்ற சிற்றினங்கள் நீண்ட, உறுதியான வாலினைப் பெற்றுள்ளன. நீர்நாய்களின் இவற்றின் 13 சிற்றினங்களைப் பொறுத்து 2 முதல் 6 அடி வரை நீளமும் 1 முதல் 45 கிலோ எடையும் வளரும். இவை மிகவும் சிறுசுறுப்பான, விளையாட்டுத்தனம் கொண்ட விலங்குகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீர்நாய்&oldid=1156756" இலிருந்து மீள்விக்கப்பட்டது