You are here

‘ஜாஸ்’ இசையுடன் தமிழ்க் கவிதைகள் படைக்கும் ‘ராகா’

சுதா ராமன்

மேற்கத்திய ‘ஜாஸ்’ இசை பாணியோடு, இந்திய பாரம்பரிய கர்நாடக, இந்துஸ்தாணி இசை பாணிகளை இணைத்து அறம் பற்றிய தமிழ்க் கவிதைகளை வித்தியாசமாகப் படைக்கவுள்ளார் புல்லாங்குழல் கலைஞர் ராகவேந் திரன் ராஜசேகரன், 29. அறத்தைக் கருப்பொருளாகக் கொண்ட இவ்வாண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ள ‘ராக் இசையுடன் தமிழ்க் கவிதைகள்’ எனும் இசை நிகழ்ச்சி நடைபெற வுள்ளது. அதில் ‘ராகாஜாஸ்’ எனும் ராக வேந்திரன் இசைக் குழு, சிங்கப் பூர், இந்திய எழுத்தாளர்களின் தமிழ்க் கவிதைகளை இசையுடன் அரங்கேற்றவிருக்கின்றன.

பாரதிதாசன் இயற்றிய ‘கொட்டு முரசே’, சிங்கப்பூரில் கலாசார பதக்கத்தைப் பெற்ற கவிஞர்களில் ஒருவரான மறைந்த சிங்கை முகிலனின் ‘அறச் சாரம்’ போன்றவற்றோடு இளம் எழுத் தாளர் ஜெயசுதா சமுத்திரனின் கவிதையையும் இசையமைத்துப் படைக்க வுள்ளார் ராகவேந்திரனும் அவரு டைய குழுவும்.

இசை நிகழ்ச்சிக்கு தயாராகவுள்ள கிம் யுன் ஹங், ஜோயல் சுவா, ராகவேந்திரன் ராஜசேகரன், சுதாசினி ராஜேந்திரன். படம்: திமத்தி டேவிட்