You are here

பீஷான் நிலைய நீர் இறைக்கும் கருவியில் கோளாறு

  • படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

பீஷான் நிலையத்தில் நீரை வெளி யேற்றும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பீஷான் சுரங்கப் பாதையில் வெள்ளநீர் நிறைந்ததாகவும் அதனால் வடக்கு=தெற்கு ரயில் சேவையில் ஏற்பட்ட தடங்கல் கிட்டத்தட்ட 21 மணி நேரத்துக்கு நீடித்தது. பீஷான் எம்ஆர்டி நிலையத் துக்கு அருகே தரைப் பாதை, சுரங்கப் பாதையுடன் இணையும் பகுதியிலுள்ள ஒரு திறந்த பகுதி வழியாக வெள்ளநீர் சுரங்க ரயில் பாதைக்குள் சென்றாக ஆரம்ப கட்ட விசாரணை தெரிவித்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

“சாதாரணமாக, இவ்வாறு சேரும் மழைநீர் அருகிலுள்ள வெள்ளநீர் வெளியேற்றும் கருவி கள் மூலம் வெளியேற்றப்படும். நேற்று முன்தினம் அந்தக் கருவி கள் செயலிழந்ததால், பெருகிய வெள்ள நீர் பீஷான்=பிராடல் நிலையங்களுக்கு இடையிலான சுரங்கப் பாதையின் கீழ்ப் பகுதி யில் தேங்கியது,” என்று ஆணை யத்தின் பேச்சாளர் கூறினார். எஸ்எம்ஆர்டி நிறுவனம், பாதுகாப்புக் கருதி உடனடியாக தடத்துக்கு விநியோகம் செய்யப் படும் மின்சார இணைப்பைத் துண்டித்தது. பின்னர் தண்ணீரை வெளியேற்றும் செயல்கட்டமைப்பு சீர்செய்யப்பட்டது.

பீஷான் ரயில் நிலைய சுரங்கப் பாதை வெள்ளநீரில் தடைப்பட்டு நின்றுவிட்ட ரயில். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்