www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

13 மே 2008 ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகள், மே 2008 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சங்கனேரி கேட் (படம்) இலக்கு வைக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாகும்.

2008 மே 13 ஜெய்பூர் குண்டு வெடிப்பு ஒன்பது தொடர் குண்டுகள் 12 நிமிட இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலத்தில் தலை நகரான, ஜெய்ப்பூர் நகரத்தில் தொடர்ந்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகளில் 70 பேர் உயிரிழந்தனர். 185 பேர் காயமடைந்தனர். இச்சம்பவங்களுக்கு வங்காளதேசத்தை சேர்ந்த, ஹர்கத்-உள்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்னும் அமைப்புதான் காரணம் என கூறப்பட்டது. இதையடுத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முகமது சயீப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சயீப் ரகுமான், ஷாபாஸ் ஹூசைன் என்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜெய்ப்பூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. பின்னர் சிறப்பு நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேரில் ஷாபாஸ் ஹூசைன் என்பவரை தவிர மீதமுள்ள 4 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஷாபாஸ் ஹூசைன் என்பவருக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததால் நீதிமன்றம் அவருக்கு விடுதலை வழங்கி உத்தரவிட்டது.

குற்றவாளிகளுக்கான தண்டனை இருதினங்களில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 பேருக்கு மரணதண்டனை விதித்து ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]