www.fgks.org   »   [go: up one dir, main page]

உள்ளடக்கத்துக்குச் செல்

செவியழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
செவியழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-9380.10
மெரிசின்பிளசு001336
ம.பா.தD010031

செவியழற்சி (Otitis) என்பது மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் செவிகளில் ஏற்படும் அழற்சி அல்லது நோய்த்தொற்றைக் குறிக்கிறது.

இது கீழ்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது:

  • புறச்செவியழற்சி (Otitis externa, swimmer's ear) புறச்செவி, செவிக்குழல் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கிறது[1]. இந்நிலையில் காதுகளைத் தொட்டாலோ, இழுத்தாலோ வலிக்கும்.
  • இடைச்செவியழற்சி (Otitis media) என்பது இடைச்செவியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும்[2]. சாதரணமாகக் குழந்தைகளில் இத்தகைய நோய்த்தொற்று ஏற்படுகிறது. இந்நிலையில் காதுகள் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டோ அல்லது செவிப்பறைக்குப் பின்புறம் சாதரணமாகக் காற்றினால் நிரப்பப்பட்ட இடைச்செவி வெளி, திரவத்தினால் அடைக்கப்பட்டோ காணப்படும். சிலநேரங்களில் அறுவைச் சிகிச்சைத் தேவைப்படலாம்.
  • உட்செவியழற்சி (Otitis interna, labyrinthitis) உட்செவியில் ஏற்படும் அழற்சியைக் குறிக்கும். சமநிலை, கேட்கும் திறன் ஆகியவற்றின் உணர் உறுப்புகள் உட்செவியில் உள்ளன. எனவே, கிறுகிறுப்பு (vertigo) உட்செவியழற்சியில் சாதாரணமாகக் காணப்படும் அறிகுறியாகும்[3].

மேற்கோள்கள்

  1. Rapini, Ronald P.; Bolognia, Jean L.; Jorizzo, Joseph L. (2007). Dermatology: 2-Volume Set. St. Louis: Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-4160-2999-0.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  2. Qureishi, A; Lee, Y; Belfield, K; Birchall, JP; Daniel, M (10 January 2014). "Update on otitis media - prevention and treatment.". Infection and drug resistance 7: 15-24. doi:10.2147/IDR.S39637. பப்மெட்:24453496. 
  3. Hogue, JD (June 2015). "Office Evaluation of Dizziness.". Primary care 42 (2): 249-258. பப்மெட்:25979586. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவியழற்சி&oldid=2747138" இலிருந்து மீள்விக்கப்பட்டது